உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் சாதனை முயற்சி

பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் சாதனை முயற்சி

புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ.,பள்ளியில் யு.கே.ஜி., மாணவர்களின் சாதனை முயற்சிகளை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டினர்.புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ.,பள்ளியில் யு.கே.ஜி., மாணவர்களின் சாதனை முயற்சி நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் முதல்வர் பாஸ்கல்ராஜ் வரவேற்றார்.நிகழச்சியில், அமைச்சர் நமச்சிவாயம், அரசின் சார்பு செயலாளர் ஹிரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில், சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் மாணவன் சர்வஜித், தடைகளை தவிர்க்கும் ரோபோவை ஒன்றிணைத்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதனை 13 நிமிடம் 14 வினாடிகள் 62 மில்லி வினாடிகளில் உருவாக்கி சாதனை படைத்தார். இந்த ரோபோக்கள் மோதல்கள் மற்றும் சேதங்களை தவிர்க்க உதவுகிறது.இதேபோல், மாணவர் தீக் ஷித் வேகமான கணித கணக்கீடுகளுக்கு உதவியும் 1 முதல் 50 வரையிலான (ஸ்கொயர் ரூட்) பட்டியலை 2 நிமிடம் 3 வினாடிகள் 37 மில்லி வினாடிகளில் கூறினார். மாணவர் அசிரியேல் லியோன்ஸ் 1 முதல் 200 வரையுள்ள எண்களை 5 நிமிடம் 54 வினாடிகள் 33 மில்லி வினாடிகளில் வேகமாக எழுதி முடித்தார். மாணவர் லோஹித், 50 ஆங்கில மழலையர் பாடல்களை 7 நிமிடம் 33 வினாடிக் 34 மில்லி வினாடிகளில் அதிவிரைவாக பாடினார்.சாதனைகளில்ஈடுபட்ட மாணவர்களையும், அவர்களின் படைப்பாற்றல் திறன்களை வளர்ப்பதில் பள்ளி முதல்வரின் செயல்களையும் அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டினார். சாதனை படைத்த மாணவர்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி