உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த பெத்திசெமினார் மாணவர்கள் சாதனை

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த பெத்திசெமினார் மாணவர்கள் சாதனை

புதுச்சேரி: உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை செய்த பெத்திசெமினார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. புதுச்சேரி பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பயிலும் மாணவர் தஸ்வின். இவர் 41 விலங்குகளில் ஒலியை வைத்து அதன் பெயரை கண்டறிந்து, அதி விரைவாக 1 நிமிடத்தில் கூறினார். அதே போன்று, மாணவி சமீரா, இவர் 55 கடல்வாழ் உயிரினங்களின் பெயரை 1 நிமிடத்தில் கூறினார். இவர்கள் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர். சாதனை செய்து பள்ளிக்கு பெருமையை சேர்த்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கினார். புதுச்சேரி – கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் நாராயணசாமி, மோகன்தாஸ், பங்குத்தந்தை ஜோசப் பால், பள்ளி ஆசிரியர்கள், மாணர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை