சாரதாம்பாள் கோவில் மகோற்சவ விழா மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சி
புதுச்சேரி : புதுச்சேரி எல்லைப் பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில், 13ம் ஆண்டு, மகோற்சவ விழாவையொட்டி, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.மார்கழி மாதத்தில், 30 நாட்கள் நடக்கும், மகோற்சவ விழா, கடந்த 16ம் தேதி துவங்கியது. தினமும், மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை, கோவிலில், விஷ்ணு சஹஸ்ரநாமம், லட்சுமி சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் சேவித்தல், திருப்பாவை நிகழ்ச்சி நடந்து வருகிறது.நேற்று மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. இன்று, 25ம் தேதி, காலை 9:00 மணிக்கு திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது. இரவு முருங்கப்பாக்கத்தில் உள்ள சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில், பஜனை நிகழ்ச்சி நடக்கிறது.நாளை 26ம் தேதி, முரளிதர சுவாமியின், மதுர கீதங்கள் நிகழ்ச்சியும், சென்னை அஸ்வின் பாகவதர் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.