உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொத்தபுரிநத்தம் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்

கொத்தபுரிநத்தம் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்

திருபுவனை: கொத்தபுரிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை லட்சுமிகாந்தம் தலைமை தாங்கினார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். மாணவர்களுக்கான ஓவியப் போட்டி,பேச்சுப்போட்டி மற்றும் பாட்டுப் போட்டியை ஆசிரியர்கள் பாட்சா, பச்சையப்பன், செல்வக்குமார் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.நிகழ்ச்சியில் ஆசிரியைகள் மோகனசுந்தரி, பெரியநாயகி, ராஜேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர் ரகுராமன், தமிழ்மாறன், புவனேஸ்வரி, நீலாவதி, ஜெயலட்சுமி, திலகவதி, ரேவதி, முன் மழலையர் ஆசிரியை அம்பிகா, உதயபுவனா மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர் பாட்சா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் பார்த்திபன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி