உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கால்நடை மருத்துவமனை சீரமைக்க பூமி பூஜை

கால்நடை மருத்துவமனை சீரமைக்க பூமி பூஜை

வில்லியனுார்: கூடப்பாக்கம் கிராமத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு கட்டடம் சீரமைப்பு பணியை அமைச்சர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டம் சார்பில், ரூ. 29.25 லட்சம் செலவில் ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு கட்டடம் சீரமைப்பு பணியை அமைச்சர் சாய்சரவணன்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப்பொறியாளர் பன்னீர், இளநிலைப் பொறியாளர் ராஜாதினேஷ், கால்நடைத்துறை இயக்குனர் மகேஸ்வரி, டாக்டர் ஆனந்தராமன், பா.ஜ., மாநில செயலாளர் ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை