மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
08-Apr-2025
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி துணை முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஆசிரியர் குருநாதன் வரவேற்றார்.தலைமையாசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் 88 பேருக்கு சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் எழில்வேந்தன், வெங்கடேசன், புஷ்பராஜ், ஆசிரியைகள் பவானி, சித்திரைசெல்வி, விழுமி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நுாலகர் கலியமூர்த்தி செய்திருந்தார். விரிவுரையாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
08-Apr-2025