உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிற்சாலை டேங்கரில் விழுந்த பீகார் வாலிபர் பலி

தொழிற்சாலை டேங்கரில் விழுந்த பீகார் வாலிபர் பலி

புதுச்சேரி: கூலிங் டேங்கரில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மணிஷ் பஸ்வான் 28, எலக்ட்ரீஷியன். இவர் காட்டுக்குப்பம் பள்ளிக்கூட வீதியில் தங்கி அதே பகுதியல் உள்ள தனியார் கம்பெனியில் மெயின்டன்ஸ் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். அங்கு கூலிங் டேங்கில் உள்ள தண்ணீர் அளவை பரிசோதிக்கும் போது, தவறி டேங்கில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தம்பி பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை