மேலும் செய்திகள்
பைக் சக்கரத்தில் புடவை சிக்கி விழுந்த பெண் பலி
03-Oct-2025
கார் மோதி தாய், மகன் காயம்
20-Oct-2025
பாகூர்: பைக்குகள் மோதி கொண்ட விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். குருவிநத்தம், பெரியார் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சந்தோஷ், 25. இவர், கடந்த 26ம் தேதி இரவு தனது உறவினரான தியாகராஜன், 34; என்பவரை அழைத்து கொண்டு யமகா எப்.இசட். பைக்கில், புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவமனை அருகே சாலையை கடந்தார். அப்போது, கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பல்சர் பைக், அவர்கள் மீது மோதியது. சந்தோஷ், தியகராஜன், விபத்து ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்த மேலழிஞ்சிப்பட்டு ராஜேஷ் ஆகியோர் காயமடைந்தனர். மூவரும் புதுச்சேரி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
03-Oct-2025
20-Oct-2025