உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுக்கடையில் தகராறு 3 பேருக்கு கத்தி குத்து பைக் மெக்கானிக் கைது

மதுக்கடையில் தகராறு 3 பேருக்கு கத்தி குத்து பைக் மெக்கானிக் கைது

பாகூர்: நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டு மாரிமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழ்வல்லவன் 22; கம்பி பிட்டர். இவர், தனது நண்பர்களான நெல்லிக்குப்பம் திலீப், 23; கார்த்திக், 29; ஆகியோருடன், நேற்று முன்தினம் இரவு சோரியாங்குப்பத்தில் உள்ள மதுபான கடையில் மது குடித்தார். அப்போது, எதிரே மது அருந்திய கடலுார் வடுகப்பாளையத்தை சேர்ந்த அரிபிரசாத், 23, என்பவர், அவர்களிடம் பேச்சு கொடுத்தார். அரிபிரசாத் மெக்கானிக் வேலை செய்வதாக கூறினார். உடனே, தமிழ்வல்லவன் தனது பைக்கை சர்வீஸ் செய்து கொடுக்க வேண்டும் என கூறி, தனது மொபைல் நம்பரை, அரிபிரசாத்தின் மொபைல் போனில் பதிவு செய்தார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அரிபிரசாத், கையில் வைத்திருந்த சிறிய கத்தியால், திலிப்பின் வயிறு மற்றும் முதுகிலும் குத்தினார். தடுக்க முயன்ற கார்த்திக், தமிழ்வல்லவனையும் கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த திலிப், கார்த்திக் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழ்வல்லவன் புகாரின் பேரில் பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிந்து அரிபிரசாத்தை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி