உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக்கில் சென்றவர் ஏரியில் விழுந்து சாவு

பைக்கில் சென்றவர் ஏரியில் விழுந்து சாவு

கடலுார்: கடலுார், ரெட்டிச்சாவடி அடுத்த உள்ளேரிப்பட்டை சேர்ந்தவர் சதீஷ், 37; தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை பைக்கில் காரணப்பட்டில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். உள்ளேரிப்பட்டில் பாகூர் ஏரிக்கரை மதகு அருகே வந்தபோது, நிலை தடுமாறி ஏரியில் விழுந்து நீரில் மூழ்கினார். உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !