மேலும் செய்திகள்
அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு
16-Nov-2026
பாகூர்: நெட்டப்பாக்கம் அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் டேவிட் 35; டிரைவர். இவர், கடந்த 11ம் தேதி இரவு நெட்டப்பாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டின் எதிரே சாலையோரமாக நின்றிருந்தார். அவ்வழியாக அதிவேகமாக சென்ற யமாகா எம்.டி. பைக், டேவிட் மீது மோதியது. படுகாயமடைந்த டேவிட், அரியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி ஷஷிரேகா அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-Nov-2026