உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

புதுச்சேரி: பைக் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.வம்பாகீரப்பாளையம், தெப்பக்குளம் வீதியை சேர்ந்தவர் கரிகாலன், 50; தனியார் கம்பெனி செக்யூரிட்டி. கடந்த 19ம் தேதி, தனது பைக்கை, சுப்பையா சாலையில் நிறுத்தி விட்டு, வாக்கிங் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ