உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

புதுச்சேரி : பைக் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெரியகாலாப்பட்டு காந்தி நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 24; இவர் அதே பகுதியில் உள்ள சலுான் கடையில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 6ம் தேதி இரவு 11:00 மணியளவில், தனது பைக்கை (பி.ஒய்.05.யூ.1354) கடை எதிரில் நிறுத்தி விட்டு, வீட்டிற்கு துாங்க சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது பைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி