மேலும் செய்திகள்
பிளஸ் 2 தேர்வில் வி.ஆர்.பி., பள்ளி சாதனை
09-May-2025
புதுச்சேரி: மூலக்குளம் பிலாபங் சர்வதேச சி.பி.எஸ்.இ., பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் அகில இந்திய அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனையை கொண்டாடும் வகையில் பிலாபங் பள்ளியில் மாணவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. சாம்பால் கல்வி குழுமத்தின் தலைவர் சாம்பால், இயக்குனர் குமரவேல், பள்ளியின் முதல்வர் ஆரோக்கியராஜ் சாதனை படைத்த மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்.மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவி அனிஷா 496 மதிப்பெண்களுடன், 2 பாடங்களில் 100க்கு 100 பெற்றுள்ளார். மாணவி அனிஷா தனது வெற்றிக்கு பிலாபங் பள்ளியே காரணம் எனவும், எதிர்கால லட்சியமாக யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டுமென்ற கனவினை பகிர்ந்து கொண்டார்.பள்ளி அளவில் மாணவர்கள் ரோகித், வீரஜ் 481, அஸ்விகா, கவின் 471 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர். விழாவில், இயக்குனர், பள்ளி முதல்வர் ஆகியோர் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை பாராட்டி வாழ்த்தி பேசினர். கல்வியாண்டில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு, வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
09-May-2025