உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் பிறந்த நாள் விழா

அரசு பள்ளியில் பிறந்த நாள் விழா

புதுச்சேரி: சேதாரப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு தொடக்கப் பள்ளியில் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் ஹேமமாலினி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வட்டம் -5 பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன் பங்கேற்று பேசினார். ஆசிரியை சரிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாறு குறித்து காணொலி மூலம் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர். ஆசிரியைகவுசல்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி