உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வன்னியர் பாதுகாப்பு பேரியக்க தலைவர் பிறந்த நாள் விழா

வன்னியர் பாதுகாப்பு பேரியக்க தலைவர் பிறந்த நாள் விழா

வில்லியனுார், : வன்னியர் பாதுகாப்பு பேரியக்கம் நிறுவனத் தலைவர் செந்தில் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர். வன்னியர் பாதுகாப்பு பேரியக்கம் நிறுவனத் தலைவர் செந்தில் பிறந்தநாள் விழா வில்லியனுாரில் கொண்டாடினர். விழாவில் முன்னதாக வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து ஏழை எளியோருக்கு வேட்டி சேலைகளையும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக நிறுவன தலைவர் செந்தில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வன்னியர் பாதுகாப்பு பேரியக்க மாநில செயலாளர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் காளி, மாநில மாணவர் அணித் தலைவர் அஜய், வில்லியனூர் தொகுதி நிர்வாகிகள் சிவராமன், கலைமணி, அன்பு, ஜெயபால், மங்கலம் தொகுதி நிர்வாகிகள் பாலமுருகன், ஜெயராமன், சதீஷ் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !