உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய புதிய தலைமுறை கட்சி நிறுவனத் தலைவர் பிறந்த நாள்

இந்திய புதிய தலைமுறை கட்சி நிறுவனத் தலைவர் பிறந்த நாள்

புதுச்சேரி : இந்திய புதிய தலைமுறை கட்சி நிறுவனத் தலைவர் குமாரவேலு தனது பிறந்த நாளை அரியாங்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடினார். பிறந்தநாள் விழாவில், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வியாபரிகள், ஊர் பிரமுகர்கள் பலர் பங்கேற்று சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக பிறந்த நாள் விழாவையொட்டி அவரது இல்லத்தில் மெகா சைஸ் கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஏற்பாடுகளை இந்திய புதிய தலைமுறை கட்சி ஆலோசகர் மன்குஷ், செய்தி தொடர்பாளர் தினேஷ், நிர்வாகிகள் ஏழுமலை, சத்தியராஜ், செல்வம், துரை, மனோகர், சுந்தர், பிராபகரன், லோகேஷ்வரன், பாலசுப்ரமணியன், எழிலரசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !