பா.ஜ., காங்., ஆதரவாளர்கள் இடையே தள்ளு முள்ளு
அரியாங்குப்பம்: அபிேஷகப்பாக்கத்தில் பா.ஜ., - காங்., கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மணவெளி தொகுதியில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. அபிேஷகப்பாக்கம் சேத்தியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் 31, 32 மற்றும் 33 ஆகிய மூன்று ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த ஓட்டுச்சாவடி வெளியில் நின்று கொண்டிருந்த பா.ஜ., மற்றும் காங்., ஆதரவாளர்களுக்கிடையே ஓட்டுப்பதிவு செய்வது தொடர்பாக, ஓட்டுப்பதிவு முடியும் நேரத்தில் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின் இவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.