உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ஜ., கலந்துரையாடல்

 பா.ஜ., கலந்துரையாடல்

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில், பிறமொழி பேசும் சமுதாய தலைவர்கள் மற்றும் மக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் ஜெயராம் ஹோட்டலில் நடந்தது. மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா முன்னிலை வகித்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார் வாழ்த்தி பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் பாபு, மாநிலத் துணைத் தலைவர் ரத்தினவேல், ரவிச்சந்திரன், சிகர் ஜெயின், மகாவீர் ஷர்மா, பார்த்தா ஹரிஹரன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, நடந்த கலந்துரையாடலில்புதுச்சேரி வளர்ச்சியில் பங்களிப்பு, தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கருத்துக்கள் பெறப்பட்டன. மேலும், பிரதமர் மோடியின் 'தேசமே பிரதானம்' என்ற கொள்கையின் கீழ் பா.ஜ., மாநிலங்களின் வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. 2016-2021 தி.மு.க., காங்., ஆட்சியில், மக்களுக்கு எந்த முக்கிய நலத்திட்டங்களும் வழங்கப்படாததுடன், மாநில வளர்ச்சியில் 20 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. இதை மாற்றி, புதுச்சேரியை மீண்டும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வர தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது முக்கியம் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை