உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., நிர்வாகிகள் - பொதுமக்கள் ஆலோசனை

பா.ஜ., நிர்வாகிகள் - பொதுமக்கள் ஆலோசனை

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதி, வைத்திக்குப்பம் அன்னை சத்யா நகர் வார்டு பொது மக்கள் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தொகுதி பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேசுகையில், சப்தகிரி குடும்பத்தினர்' என்ற பெயரில் அனைவருக்கும் கார்டு வழங்க இருக்கிறேன். அதன் மூலம் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து பரிசுப்பொருட்கள் வழங்கப்படும்.கழிவுநீர் வாய்க்கால் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 10வது, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசு, உதவித்தொகை வழங்கப்படும். இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் தரப்படும். பெண்களுக்கு உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்வதற்கு மையம் அமைக்கப்படும். பெண் யோகா பயிற்றுநர் மூலம் பயிற்சி அளிக்கப்படும்' என்றார்.கூட்டத்தில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி