மேலும் செய்திகள்
விழிப்புணர்வு நடைபயணம்
24-Mar-2025
புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., சார்பில், 45ம் ஆண்டு ஸ்தாபன தினத்தை முன்னிட்டு அமைதி நடைபயணம் நேற்று நடந்தது. சாரம் அவ்வை திடலில் துவங்கிய நடைபயணத்தை மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். காமராஜர் சாலை வழியாக சென்ற அமைதி நடைபயணம் ராஜா தியேட்டர் அருகே முடிவடைந்தது.இதில், அமைச்சர் சாய் சரவணன் குமார், எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், ராமலிங்கம், அசோக் பாபு உள்ளிட்ட மாநில, மாவட்ட அணி, பிரிவு, தொகுதி நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
24-Mar-2025