உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., 22 பிரிவுகளுக்கான பயிற்சி பட்டறை துவக்கம்

பா.ஜ., 22 பிரிவுகளுக்கான பயிற்சி பட்டறை துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில் கட்சியின் 22 பிரிவுகளுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை ஜெயராம் ஓட்டலில் நடந்தது. மாநில தலைவர் ராமலிங்கம் குத்துவிளக்கேற்றி பயற்சி பட்டறையை துவக்கி வைத்தார். அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., முன்னாள் சபாநாயகர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு கட்சியின் அமைப்பு முறைகள், ஒவ்வொரு பிரிவின் தனித்தன்மைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், கட்சியின் செயல்முறைகள், நிர்வாகிகளின் பொறுப்புகள் மற்றும் பிரிவுகள் சிறப்பாக செயல்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். இப்பயிற்சி பட்டறையில் கட்சின் 22 பிரிவுகளை சேர்ந்த மாநில அமைப்பாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு பிரிவின் பணிகள், செயல்பாடுகள் மற்றும் பொருப்புகள் குறித்து நிர்வாகிகளுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை வலுப்படுத்தவும், மக்கள் நலன் சார்ந்த பணிகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கவும், கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் எடுத்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !