உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., பிரமுகர் வெட்டி படுகொலை புதுச்சேரியில் நள்ளிரவில் பயங்கரம்

பா.ஜ., பிரமுகர் வெட்டி படுகொலை புதுச்சேரியில் நள்ளிரவில் பயங்கரம்

புதுச்சேரி : புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் உமாசங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி, சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உமாசங்கர், 38. இவர், காமராஜர் நகர் தொகுதி பா.ஜ., பொறுப்பளராக இருந்து வந்தார். இந்நிலையில் இன்று 27ம் தேதி தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டின் பிறந்த நாள் விழா கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள பாரீஸ் திருமண நிலையத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவரது பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை உமா சங்கர் கவனித்து வந்தார். நேற்று இரவு கருவடிக்குப்பம் பாரீஸ் மண்டபத்தில் நடந்து வரும் பிறந்த நாள் விழா பணிகளை பார்த்துவிட்டு, இரவு 11:30 மணியளவில் வெளியே வந்தார். அப்போது அங்கு 5 பைக்குகளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் உமாசங்கரை கத்தியால் சரிமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். உமாசங்கர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலியே இறந்தார். தகவலறிந்து வந்த உமாசங்கரின் தாய் மற்றும் அவரது மனைவி சாலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்த உடலை கண்டு கதறி அழுதனர். இதனிடையே சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில், லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அவரது தாய் மற்றும் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யும் வரை உமாசங்கரின் சடலத்தை எடுக்கக் கூடாது என, கூறியதால் பரபரப்பு நிலவியது. அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ