உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., எம்.எல்.ஏ., மருத்துவமனையில் அட்மிட்

பா.ஜ., எம்.எல்.ஏ., மருத்துவமனையில் அட்மிட்

வில்லியனுார்: பா.ஜ., எம்.எல்.ஏ., சாய் சரவணன்குமார் உடல் நலக்குறைவாக சென்னை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சாய்சரவணன்குமார் சில மாதங்களுக்கு முன் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நோயின் தாக்கம் அதிகரிக்கவே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !