துணை ஜனாதிபதியிடம் பா.ஜ., எம்.எல்.ஏ., மனு
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்ககோரி துணை ஜானதிபதியிடம் கல்லயாணசுந்தரம் எம்.எல்.ஏ., மனு வழங்கினார். மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய பல்கலைக்கழகமான புதுச்சேரி பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட காலத்தில், அப்போது இருந்த பாடப்பிரிவுகளில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த நடைமுறை அந்தப் பழைய பாடப்பிரிவுகளில் இன்றும் தொடர்கிறது. அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதேபோல், பல்கலைக்கழகம் அமைவதற்காக நிலங்களை வழங்கிய குடும்பத்தினருக்கு பல்கலைக்கழகத்தில் பணி ஆணை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.