உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டில்லியில் பா.ஜ., வெற்றி புதுச்சேரியில் கொண்டாட்டம்

டில்லியில் பா.ஜ., வெற்றி புதுச்சேரியில் கொண்டாட்டம்

புதுச்சேரி : டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை தொடர்ந்து, புதுச்சேரி மாநில பா.ஜ., நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது.அதன்படி, தலைநகர் டில்லியில் 1993க்கு பிறகு பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. இதையொட்டி,புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், ராமலிங்கம், வெங்கடேசன் மாநில பொது செயலாளர்கள் மோகன்குமார், மவுலிதேவன், வெற்றிச்செல்வம் ஆகியோர் இந்திரகாந்தி சிலை அருகே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இதில், பா.ஜ., மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !