படகுகளை சீர் செய்யும் பணி தீவிரம்
காரைக்கால்: காரைக்காலில் மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு மீனவர்கள் படகுகளை சீர் செய்யும் பணி பட்டுவருகின்றனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால்மேடு,கிளிஞ்சல்மேடு,கோட்டுச்சேரிமேடு,காளிகுப்பம், பட்டினச்சேரி உள்ளிட்ட 11மீனவ கிராமத்தை சேர்ந்த 5ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் மீனவர்கள் யாரும் தொழிலுக்கு செல்லவில்லை.இதனால் பெரும்பாலான மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி அதனை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.