உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுால் வெளியீட்டு விழா 

நுால் வெளியீட்டு விழா 

புதுச்சேரி : புதுச்சேரி தமிழ்ச்சங்க வளாகத்தில் செந்தில் விஸ்வநாதன் எழுதிய 'யார் சொல்லக்கூடும், வாழ்வின் தேடல்களை' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது.சிருஷ்டி பவுண்டேஷன் நிறுவனர் கார்த்திகேயன் கணேசன் வரவேற்றார். ஆதிதிராவிடர் நலத்துறை நல ஆய்வாளர் வித்யாவதி தொகுத்து வழங்கினார்.விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று நுாலினை வெளியிட, சபாநாயகர் செல்வம் முதல் பிரதியை பெற்று கொண்டார்.காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மைய பேராசிரியர் கிருஷ்ணகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், தாகூர் கல்லுாரி உளவியல் துறை தலைவர் ராமபிரபு, ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி துணை பதிவாளர் பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.நுாலாசிரியர் செந்தில் விஸ்வநாதன் ஏற்புரை வழங்கினார். பேராசிரியர் ஆயி நன்றி கூறினார். அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை