உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி: காற்று படைப்பகம் சார்பில், மூன்று தலைமுறை பெண்களின் நுால்கள் வெளியீட்டு விழா, புதுச்சேரி ஆர்.கே.என்.,கிராண்ட் ஓட்டலில் நடந்தது. நுாலாசிரியர் ராஜலட்சுமி வரவேற்றார். மயிலம் சிவஞான பாலாய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் லட்சாராமன் பேசுகையில், 'மூன்று தலைமுறை பெண்களின் இத்தகைய படைப்பாற்றல் பெண்ணினத்தின் பெரும் சாதனையாக விளங்குகிறது. இதுபோன்று இன்னும் பல்வேறு படைப்புகளை உருவாக்கி சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பினை கொடுக்கவேண்டும்' என்றார்.சிறப்பு விருந்தினராக போக்குவரத்து பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா பங்கேற்று, அம்மா, மகள், பேத்தி என, மூன்று தலைமுறைப் பெண்கள் எழுதிய வண்ணக் கோலங்கள் - விஜயலட்சுமி, ஆடை வடிவம் அழகு -சங்கம் காட்டும் தோற்றம்-ராஜலட்சுமி, கால் நனைத்த பொழுதுகள் - அமிர்தவள்ளி ஆகிய நுால்களை வெளியிட்டனர். பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியர் பட்டம்மாள் நுால் திறனாய்வு குறித்து பேசினார். விழாவில் விஜயலட்சுமி, ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். நுாலாசிரியர் அமிர்தவள்ளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை