மேலும் செய்திகள்
திருக்குறள் கூறும் நிகழ்ச்சி
21-Jul-2026
புதுச்சேரி: மலேசிய தமிழறிஞர் சீராகி எழுதிய 'ஜாலியானந்தா சமுதாய சிந்தனைகள்' எனும் நுால் வெளியீட்டு விழா புதுவை தமிழ் சங்கத்தில் நடந்தது. தமிழ்சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். தமிழ் சங்கச் செயலர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக என்.ஆர்.காங்., பொதுச்செயலாளர் ஜெயபால் கலந்து கொண்டு, புதிய நுாலினை வெளியிட, புதுவை தமிழ் சங்கத் தலைவர் முத்து பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மலேசிய தமிழ் சமூக பண்பாட்டு நட்புறவு கழகத் தலைவர் மணிவாசகம், கோபாலகிருஷ்ணன், நுாலாசிரியர் சீராகி, பேராசிரியர் ராமலிங்கம், பொறியாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் அருள் செல்வம், நக்கீரர் தமிழ்ச் சங்கம் பாஸ்கர், மல்லை பூபதி, கவிஞர் ஆனந்தராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
21-Jul-2026