உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நடைவண்டி சிறுவர் இலக்கிய கழகம் சார்பில் நுால் வெளியீடு

நடைவண்டி சிறுவர் இலக்கிய கழகம் சார்பில் நுால் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி நடைவண்டி சிறுவர் கலை இலக்கிய கழகம் சார்பில் நுால் வெளியீட்டு விழா தமிழ் சங்கத்தில் நடந்தது. மாநில முத்தமிழ் கழகத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். பிரபா வரவேற்றார். உசேன், தமிழ் சங்கத்தின் பொருளாளர் அருள்செல்வம், நண்பர்கள் தோட்டம் பொருளாளர் யுக பாரதி முன்னிலை வகித்தனர். நடைவண்டி சிறுவர் கலை இலக்கியக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பாலசுப்பிரமணியன் நோக்க உரையாற்றினார். பொதுப்பணித்துறைதலைமை பொறியாளர் வீரசெல்வம் பங்கேற்று, முருகேசன் எழுதிய 'புதுச்சேரி கடற்கரைகள்' என்ற நுாலினை வெளியிட, தொழிலதிபர் தங்கவேலுபெற்றுக் கொண்டார். தொடர்ந்து, விஜயலட்சுமி எழுதிய 'சிங்க மழை காடு' மற்றும் 'கர்வம் பிடித்த பூசணிக்காய்' ஆகிய நுால்களை எழுத்தாளர் செல்வம் வெளியிட்டார். சீனு வேணுகோபால், சுந்தர முருகன் ஆகியோர் நுாலாய்வு செய்தனர். நெய்தல் நாடன், முன்னாள் எஸ்.பி., வீர பாலகிருஷ்ணன், தமிழ் சங்கத்தின்செயலர் சீனு மோகன்தாஸ், துணைத் தலைவர் திருநாவுக்கரசு வாழ்த்திப் பேசினர். ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கிய விசாகன், பச்சையம்மாள், ஜெயஸ்ரீ ஆகியோருக்கு சாவித்திரிபாய் புலே, ஜோதிராவ் புலே ஆகியோர் பெயரில்விருதுகள் வழங்கப்பட்டன. கழகத்தின் செயலர் யாழினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி