உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி வரலாறு குறித்த நுால் வெளியீடு

புதுச்சேரி வரலாறு குறித்த நுால் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி வரலாறு குறித்த நுாலினை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். புதுச்சேரியின் வரலாறு பற்றி பேராசிரியர் ராமானுஜம் இதுவரையில் 1674 பிரஞ்சியர் ஆட்சி தொடங்கி 1954 இல்பிரான்சின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற்ற வரையில் நான்கு நூல்களை வெளியிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, 1954 நிர்வாகம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டாலும் அதன் சட்ட பூர்வமான விடுவிப்பும் இணைப்பும் 1962 வரையில் 8 ஆண்டுகளுக்குத் தாமதப்படுத்தப்பட்டது. அதற்கான காரணங்களை விளக்கி பிரஞ்சிந்தியா - பிரான்சிலிருந்து விடுவிப்பும் இந்தியாவுடன் இணைப்பும் என்ற தலைப்பில் ஐந்தாவது நூலாக வெளியிட்டுள்ளார். சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி வெளியிட அமைச்சர் லட்சுமி நாராயணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் முதல்வரின் தனிச்செயலாளர் அமுதன், கல்வித்துறை முன்னாள் இணை இயக்குநர் ராமதாஸ், முருகராஜா, ராம்முனுசாமி, அசோகன், கணேஷ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !