ஓ ட்டலில் தகராறு இருதரப்பினர் புகார்
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் சங்கர், 45; இவர், காந்தி வீதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார். உணவு வழங்க ஏன் கால தாமதம் செய்கிறீர்கள் என ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டார். இதில் அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். அதில் காயமடைந்த சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சங்கரின் சகோதரர் ராஜசேகர், ஓட்டல் உரிமையாளர் சித்தானந்தம் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில், முத்தியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.