அதிவேகமாக பைக் ஓட்டிய சிறுவன் மீது வழக்கு
பாகூர்: அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்ற சிறுவன் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர். கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் நேற்று (நவ.,14) அரியாங்குப்பம் சிக்னல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி டி.வி.எஸ். செஸ்ட் ஸ்கூட்டரை வாலிபர் ஒருவர் அதிவேகமாகவும், பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ஓட்டிச் சென்றார். இது குறித்து போலீசார் விசாரணையில், பெரியகாட்டுக்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பைக்கை அதிவேகமாக ஓட்டிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து, காவலர் வெங்கடாலம் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.