உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சைபர் கிரைம் அவசர எண்ணில் பேசி பானி பூரி, சாக்லேட் கேட்ட சிறுவன்

சைபர் கிரைம் அவசர எண்ணில் பேசி பானி பூரி, சாக்லேட் கேட்ட சிறுவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி : புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, பானி பூரி, சாக்லேட் கேட்டு தொந்தரவு செய்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினரை போலீசார் எச்சரித்தனர்.புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண் 1930ஐ, இரண்டு நாட்களாக தொடர்பு கொண்ட ஒருவர், பானி பூரி, சாக்லேட் வேண்டுமென தொந்தரவு கொடுத்தார்.போலீசார், நேற்று அந்த தொடர்பு எண்ணை வைத்து அவரது வீட்டை கண்டுபிடித்து, அங்கு சென்று விசாரித்தனர். அதில், போன் செய்து பானிபூரி, சாக்லேட் கேட்டது 7 வயது சிறுவன் என்பதும், பள்ளி விடுமுறையால் தமிழகத்தின், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளதும் தெரியவந்தது.போலீசார், அச்சிறுவனிடம் 'எப்படி உனக்கு 1930 என்ற எண் தெரியும்' என, கேட்டனர். சிறுவன், ஊரில் உள்ள தன் தாய்க்கு போன் செய்த போது, 'அவசர உதவிக்கு 1930 என்ற எண்ணிற்கு அழையுங்கள்' என, காலர் டியூனில் வந்ததாகவும், அதனால் எனக்கு சாக்லேட், பானிபூரி வாங்கித் தந்து உதவ போன் செய்து அழைத்ததாகவும் தெரிவித்தான். அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினரிடம், 'சிறுவனை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இரண்டு நாட்களில் மட்டும் 8க்கும் மேற்பட்ட முறை எங்களுக்கு போன் செய்திருக்கிறான். இதுபோன்ற தொந்தரவு இனி நடந்தால் உங்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
மே 16, 2025 12:46

நன்றி சின்னப்பையா. எப்போ யாரையாவது போனில் கூப்பிட்டாலும் இவிங்களோட சைபர் குற்ற அறிவிப்பை பேசியே டார்ச்சர் குடுக்கறாங்க. நேத்தியிலிருந்து கொஞ்சம் குறைஞ்சிருக்கு.


bharathi
மே 16, 2025 08:53

The number only fit for that ..surprised to note that someone attending too...their website was a hell too also without bribing nothing get registered by our police


Vasan
மே 16, 2025 06:53

Innocent child. Police shouldnt have advanced further after knowing that the caller is a child. They could have even surprised him by arranging paani puri once. Now the child may be in a mental shock on seeing policemen at his home.


Narayanan K
மே 16, 2025 08:34

Yes Vasan..I too have the same thoughts. Police should have got him Paani puri and Chocolates and suprised him. But should warn his parents.


Kasimani Baskaran
மே 16, 2025 03:44

அவனுக்கும் யாராவது அந்த 12 எண்ணை சொல்லச்சொல்லி கொடச்சல் கொடுத்து இருப்பார்கள்.


sasikumaren
மே 16, 2025 02:31

அன்பு தொல்லை ஆனால் கொஞ்சம் அழகாக இருக்கிறது ஆனால் தொல்லை தானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை