உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாய்ப்பால் வார விழா

தாய்ப்பால் வார விழா

புதுச்சேரி : லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் ஊக்குவிப்பு வார விழா நடந்தது. சுகாதார மேற்பார்வையாளர் ராதாமுத்து வரவேற்றார். ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை முதன்மை மருத்துவர் முரளி முன்னிலை வகித்தார். நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி பத்மினி, மருத்துவர் யுவராஜ் தலைமை தாங்கி, தாய்ப்பால் ஊட்டுவதால், குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் மேம்படும் என்ற தாய்ப்பால் வார விழாவில் கருப்பொருளை விளக்கிப் பேசினர். மக்கள் நல சேவை இயக்க தலைவர் நந்தா ஜெயஸ்ரீதரன், சபரி செவிலியர் கல்லூரி முதல்வர் ழெனஸ்தாமரி ழிழேல், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி செல்வக்குமார் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி தலைவர் பாக்கியராஜ் ஆகியோர் பேசினர். கிராமப்புற செவிலியர் கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை