உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சேதராப்பட்டு அருகே கொத்தனார் தற்கொலை

சேதராப்பட்டு அருகே கொத்தனார் தற்கொலை

வில்லியனுார் : சேதராப்பட்டு அருகே குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த கொத்தனார் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சேதராப்பட்டு அருகே உள்ள கரசூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் தேசிங்கு, 56; கொத்தனார். இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர், கொடுக்காததால் மனமுடைந்த தேசிங்கு நேற்று காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ