அண்ணன் கண்டிப்பு தங்கை தற்கொலை
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் பேட், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூங்காவனம், 65; இவரது மகள் பூவிழி, 19; குருமாம்பேட்டில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் காலை பூவிழி வேலைக்கு சென்ற நிலையில், அவரது அண்ணன் கிருஷ்ணமூர்த்தி, தற்காலிக பஸ் நிறுத்தம் மால் அருகே பூவிழியை பார்த்துள்ளார்.பின், பூவிழியிடம் வேலைக்கு செல்லாமல், இங்கு என்ன செய்கிறாய் என கேட்டு கண்டித்துள்ளார். மனமுடைந்த பூவிழி வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.