பி.ஆர்.டி.சி., பஸ்கள், எலக்ட்ரிக் பஸ்களாக மாற்றம்
புதுச்சேரி : அனைத்து பி.ஆர்.டி.சி., பஸ்களும், எலக்ட்ரிக் பஸ்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்திற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடியில் 25 எலக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் அடுத்த மாதங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. முதலில் எலக்ட்ரிக் பஸ்கள் நகர்ப்புறம் மற்றும் மாநிலத்திற்குள் மட்டுமே இயக்கப்படும். டிசம்பர் மாதத்திற்குள் டீசல் பஸ்கள் முழுதும் எலக்ட்ரிக் பஸ்களாக மாற்ற வேண்டும் என்பது அரசின் நோக்கம். இதற்காக 75 மின்சார பஸ்கள் வாங்க, வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகத்திடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.எலக்ட்ரிக் பஸ்கள் வெளிமாநிலங்களுக்கும் விரிவுப் படுத்தப்படும். புதிய இ-பஸ்களை இயக்கும் வகையில் டெப்போ உள்கட்டமைப்பு உருவாக்கப்படும்' என்றார்.