பி.எஸ்.என்.எல்., 4ஜி சிம் சிறப்பு மேளா
புதுச்சேரி: பி.எஸ்.என்.எல்., பழைய சிம்கார்டை புதிய 4ஜி சிம் கார்டுகளாக மாற்றி கொள்ள நாளை முதல் 4 நாட்கள் சிறப்பு மேளா நடக்கிறது.முதன்மை பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., இந்த ஆண்டு அக்., மாத இறுதிக்குள் அனைத்து மொபைல் கோபுரங்களையும் 4 ஜி சேவையாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.வாடிக்கையாளர்கள் தங்களது பழைய 2ஜி, 3ஜி சிம் கார்டுகளை, 4ஜி சிம் கார்டுகளாக மாற்றிக்கொள்ளவும். வாடிக்கையாளர்கள் தங்களது சிம் கார்டுகள் பற்றி விபரம் அறிந்து கொள்ள 94428 24365 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுக்கவும். இச்சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே.வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள சேவை மையம் மற்றும் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர் மையங்களைஅணுகலாம். மேளா நடக்கும் மேட்டுப்பாளையம், மதகடிப்பட்டு, வில்லியனுார், சேதராபட்டு, ஏம்பலம் சந்திப்பு, தவளக்குப்பம், கோட்டகுப்பம் இந்தியன் வங்கி அருகில், அரும்பார்த்தபுரம், கரியமாணிக்கம் சந்திப்பு, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, முதலியார்பேட்டை சந்திப்பு ஆகிய இடங்களில் நாளை 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை 4நாட்கள் புதிய 4ஜி சிம் கார்டு இலவசமாக மாற்றி கொள்ளலாம்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.