உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொபைல் மூலம் இன்டிரா நெட் வசதி பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது

மொபைல் மூலம் இன்டிரா நெட் வசதி பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது

புதுச்சேரி: பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இன்டிரா நெட் இலவச தொலைகாட்சி சேவை மற்றும் தேசிய வைபை ரோமிங்., பைபர் இன்டிராநெட் தொலைக்காட்சி சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு கிராமத்தில், நேற்று பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இன்டிரா நெட் இலவச தொலைகாட்சி சேவை மற்றும் தேசிய வைபை ரோமிங்., பைபர் இன்டிராநெட் தொலைக்காட்சி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., நிர்வாக இயக்குனர் ராபர்ட் ரவிஜெரார்ட் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக வட்ட தலைமை பொது மேலாளர் பார்த்திபன், புதுச்சேரி முதன்மை பொது மேலாளர் திலவதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நிர்வாக இயக்குனர் கூறுகையில், 'பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இந்தியர்களுக்கு எந்த நேரத்திலும், தரமான மற்றம் தடையற்ற சேவைகள் கிடைக்க, டிஜிட்டல் சேவை புரட்சி மற்றும் டிஜிட்டல் மாற்றங்களை செய்து வருகிறது.புதுமையான டிஜிட்டல், இணைப்பு, உயர்தர டிஜிட்டல் பொழுது போக்கு அம்சங்களுடன் பெறுவதற்கு நிறுவனம் வழிகை செய்து வருகிறது. மொபைல் மூலம் இன்டிரா நெட் டிவி.,யில், முதல் முறையாக 300க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களின் சேவைகளும், மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kanagasundaram
டிச 26, 2024 17:40

முதலில் தடையில்லா வாய்ஸ் கால் க்கு முயற்சி செய்யணும்.அப்பறம் மொபைல் இன்டர்நெட்.அதற்கு பிறகு டிவி சேவையை கொடுங்க.


முக்கிய வீடியோ