பி.எஸ்.என்.எல்., ரூ.1க்கு சுதந்திர தின திட்டம் அறிமுகம்
புதுச்சேரி : பி.எஸ்.என்.எல்., ரூ.1க்கு, ஒரு மாதம் வேலிடிட்டியில், 4ஜி சேவையை வழங்கும் சுதந்திர தின திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதன்மை பொதுமேலாளர் செய்திக்குறிப்பு; சுதந்திர தினத்தை முன் னிட்டு பி.எஸ்.என்.எல். , ஆகஸ்ட் மாதத்தில் 4 ஜிசேவைகளை, ஒரு ரூபாய் விலையில் வழங்கும் புதிய சுதந்திர தின திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இதில், ஒரு நாளைக்கு 2 ஜி.பி., டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 எஸ்.எம்.எஸ், 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் இலவச சிம் வழங்கப்படுகிறது. ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட் டுள்ள பி.எஸ்.என்.எல்., 4ஜி சேவையின் மூலம் சுதந்திர தின முன்னிட்டு ஒவ்வொரு இந்தியரும்உள்நாட்டு நெட் வொர்க்கை இலவசமாக சோதித்து பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பொதுமக்கள் அருகி லுள்ள பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சர்வீஸ் சென்டர்களான புதுச்சேரி, வில்லியனுார், மேட்டுப்பாளையம் மற்றும் அனைத்து ரீட்டைலர் கடைகளிலும் பெற்று கொள்ளலாம். மேலும், மேளா நடக்கும் இடங்களுக்கு சென்றும், சுதந்திர தின திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.