உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூன்று அரசு பணி தேர்வில் சாதித்த பி.டெக்.,பட்டதாரி

மூன்று அரசு பணி தேர்வில் சாதித்த பி.டெக்.,பட்டதாரி

நெட்டப்பாக்கம் : புதுச்சேரியில் நடந்த 3 அரசு பணி போட்டித்தேர்வுகளில் சாதித்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர். பண்டசோழநல்லுார் பேட் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் மகன். எழில் அமுதன் 29, பி.டெக்.. படித்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அரசு பணியில் சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன், புதுச்சேரி பயிற்சி மையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக படித்து வந்தார். கடந்த 2023-ல் நடந்த எல்.டி.சி., யூ.டி.சி. தேர்வுகளில் தோல்வியடைந்தார். இருப்பினும் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திய எழில் அமுதன், தற்போது நடந்த துணை தாசில்தார், மின்துறை இளநிலை பொறி யாளர், உதவியாளர் தேர்வுகளில் தொடர்ந்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கிடையில் அவர் முதலாவது தேர்ச்சியடைந்த மின்துறை இளநிலை பொறியாளர் பணியில் சேர்ந்து பணி செய்து வருகிறார். ஆனால் அவர் துணை தாசில்தார் பணியில் சேர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 3 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அவரை கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ