மேலும் செய்திகள்
எம்.ஐ.டி., கல்லுாரியில் சுற்றுசூழல் தின விழா
01-Aug-2025
புதுச்சேரி : மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வணிகவியல் துறை மாணவர்கள் சார்பில் 'பட்ஜெட் - 2025' வணிகவியல் மாநாடு நடந்தது. மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை விவேகானந்தா கல்லுாரி முன்னாள் பேராசிரியர் சங்கர் ராமன், டி.வி.எஸ். ஆலோசனைக் குழுவில் செயல்முறை ஆட்டோமேஷன் நிபுணர் நிவேதன், சென்னை திரி லீப் அகாதடெமி நிறுவனர் சித்தார்தன், சங்கர், குரு பட்டைய கணக்காளர்கள் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் சங்கர், வேபார்வர்ட் அகாடமியின் இணை நிறுவனர் கார்த்திக் ஆகியோர் எதிர்காலம் மற்றும் வெளிநாடுகளில் உருவாகும் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்தும், பட்டைய கணக்காளர் ஆவதற்கு உரிய வழிமுறைகள், தேசிய அளவில் பல்வேறு நிலைகளில் நடைபெறும் தேர்வு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினர். ஏற்பாடுகளை வணிகவியல் துறைத் தலைவர் ஜானகி ரமா செய்திருந்தார்.
01-Aug-2025