உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்ஜெட் வேளாண்துறைக்கு ரூ.176.27 கோடி

பட்ஜெட் வேளாண்துறைக்கு ரூ.176.27 கோடி

மத்திய தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கத்தின்கீழ் 550 ெஹக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யம் வகையில், அதிக மகசூல் தரும் நிலக்கடலை விதைகள் வழங்கப்படும். சிறிய பயறு அரவை ஆலைகள் மற்றும் எண்ணெய் ஆலைகள் அமைக்க நிதியுதவி வழங்கப்படும். வேளாண் பணிகளில் ட்ரோன்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்க வேளாண் அறிவியல் நிலையங்களுக்கு இரண்டு ட்ரோன்கள் வழங்கப்படும். மஞ்சள் பதப்படுத்தும் நிலையம் அமைக்க நிதியுதவி வழங்கப்படும். வேளாண் விளைபொருட்களை பதப்படுத்த சோலார் பயிர் உலர்த்துகள் கருவிகள் வாங்க நிதியுதவி வழங்கப்படும். காரைக்கால் நேரு வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்த, ஒருங்கிணைந்த முன்னோடி மையம் மற்றும் விவசாய இயந்திரங்களுக்கான தனிப்பயன் வாடகை மையம் அமைக்கப்படும். 8 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு விவசாயத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். 2026–27ம் ஆண்டில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்காக ரூ176.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை