பீரோவை உடைத்து நகைகள் திருட்டு
புதுச்சேரி : வீட்டில் பீரோவை உடைத்து நகைகளை திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ரெட்டியார்பாளையம் அருள் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 37; தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி சிவசங்கரி. இவர் தனது நகைகளை கடந்த 27ம் தேதி இரவு 9:00 மணியளவில் பீரோவில் வைத்து பூட்டி விட்டு துாங்கசென்றார். மறுநாள் மாலை 6:00 மணிக்கு அருகில் உள்ள கடைக்கு சென்று, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.