உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலதிபர் பாஜ., வில் ஐக்கியம்

தொழிலதிபர் பாஜ., வில் ஐக்கியம்

புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபரும், அரசு ஒப்பந்ததாரருமான சந்திரமோகன் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணையும் விழா அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் நடந்தது.அரியாங்குப்பம் தொகுதி தலைவர் வசந்தராஜ் தலைமை தாங்கினார்.பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோர் முன்னிலையில் சந்திரமோகன் தனது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோருடன் பா.ஜ.,வில் இணைந்தார். இதில் செல்வம் எம்.எல்.ஏ., மாநில, மாவட்ட, தொகுதி, மகளிரணி, இளைஞரணி நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை