உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பரபரப்பான புதுச்சேரி நேற்று வெறிச்சோடியது

பரபரப்பான புதுச்சேரி நேற்று வெறிச்சோடியது

புதுச்சேரி: எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் புதுச்சேரி தீபாவளியான நேற்று மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றலா நகரமான புதுச்சேரி நகரப் பகுதியில் மக்கள் கூட்டம் மிகுந்து எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் தீபாவாளி பண்டிகையொட்டி கடந்த 10 தினங்களாக ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க அருகாமையில் தமிழக பகுதி மக்களும் புதுச்சேரிக்கு வருகை தந்ததாலும், தீபாவளி பண்டிகைக்கு பலர் தங்கள் சொந்த ஊர்களில் கார் உள்ளிட்ட வாகனங்களில் திரும்பியதால், புதுச்சேரியில் திரும்பிய பக்கமெல்லாம் போக்குவரத்து நெரிசல் நிலவியது. உள்ளூர் மக்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் நேற்று மக்கள் பலரும் தங்கள் குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாடியதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகர சாலைகளும், புதுச்சேரி பஸ் நிலையமும் நேற்று மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை