உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கான்கிரீட் கட்டையில் மோதிய கார் சேதம்

கான்கிரீட் கட்டையில் மோதிய கார் சேதம்

பாகூர் : பாகூரில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர ஹைமாஸ் விளக்கு கான்கிரீட் கட்டையில், மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பரிக்கல்பட்டில் இருந்து பாகூர் நோக்கி நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில், மாருதி ஆல்டோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பாகூர் துாக்குபாலம் சந்திப்பு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த ஹைமாஸ் விளக்கு கான்கிரீட் கட்டையின் மீது மோதியது. இந்த விபத்தின்போது, காரின் ஸ்டியரிங் ஏர் பேக் வெளியேறியதால், காரை ஓட்டிச் சென்ற சுமார் 65 வயது மதிக்க தக்க முதியவர் அதிஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். அங்கிருந்த பொது மக்கள், அவரை மீட்டு, விசாரித்தனர். அதில், அவர், பின்னாட்சிக்குப்பத்தில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த முதியவரை, பொது மக்கள் மீட்டு, வேறு ஒரு கார் மூலமாக, அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை