உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கார் கவிழ்ந்து விபத்து

கார் கவிழ்ந்து விபத்து

பாகூர்: கிருமாம்பாக்கத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சென்னை, நங்கநல்லுார் ராம் நகரை சேர்ந்தவர் பரவி, 56. இவர் நேற்று மாமனார் மற்றும் மாமியாருடன் தனது மாருதி சுவிப்ட் காரில் புதுச்சேரி வழியாக கடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தார்.புதுச்சேரி - கடலுார் சாலை கிருமாம்பாக்கம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த மூவரையும் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை